செய்திகள் :

Veera Dheera Sooran: `என் தந்தை திரையரங்கிற்குச் சென்று...' - மன்னிப்புக் கேட்ட இயக்குநர்

post image

விக்ரம் நடிப்பில் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் இன்று `வீர தீர சூரன்' திரைப்படம் வெளியாகவிருந்தது. ஆனால், `பி4யூ' நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

Veera Dheera Sooran
Veera Dheera Sooran

இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான `எச்.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்துக்கு பி4யூ நிறுவனம் பைனான்ஸ் செய்திருக்கிறது. அதற்காக, படத்தின் ஓ.டி.டி உரிமத்தை இந்த `பி4யூ' நிறுவனத்துக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஓ.டி.டி உரிமம் விற்கப்படுவதற்கு முன்பே திரைப்படம் வெளியாவதால் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை விற்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகக் கூறி இந்த `பி4யூ' நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

விதிக்கப்பட்ட தடை

நேற்று இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட இடைகால தடை விதித்திருந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இன்று `வீர தீர சூரன்' படக்குழு உடனடியாக 7 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் படத்தின் ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியது.

அதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Veera Dheera Sooran
Veera Dheera Sooran

தற்போது `எச்.ஆர் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தில் முதலீடு செய்த `பி4யூ' நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்னைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் `வீர தீர சூரன்' படத்தை வெளியிட தடையில்லை என உத்தரவிட்டிருக்கிறது.

இன்று மாலை காட்சியிலிருந்து திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தடை நீங்கிய தீர்ப்பு வந்ததுக்குப் பிறகு இயக்குநர் அருண்குமார், `` `வீர தீர சூரன்' திரைப்படம் இன்று மாலை திரையரங்குகளில் வெளியாகிறது. காலையிலிருந்து என்னுடைய தந்தை மூன்று முறை திரையரங்கிற்குச் சென்று படம் வெளியாகவில்லை என்பதை அறிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்.

இயக்குநர் அருண்குமார்
இயக்குநர் அருண்குமார்

இதன் மூலம் சீயான் விக்ரம் ரசிகர்களும், பொதுமக்களும் எவ்வளவு இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர்களிடம் உளமார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறி இருக்கிறார்.

Vijay Sethupathi: `போக்கிரி' பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி - அசத்தும் லைன் அப்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்', 'மஹாராஜா', 'விடுதலை பாகம் -2' போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிப்பைத் தாண்டி கடந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளரா... மேலும் பார்க்க

Dushara: 'கலைவாணியாக பயணித்த இந்த அனுபவம்..'- வீர தீர சூரன் பாகம் 2 குறித்து நடிகை துஷாரா நெகிழ்ச்சி

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக... மேலும் பார்க்க

டேனியல் பாலாஜி : 'ஹீரோவாக வரக்கூடிய தகுதிகள் அத்தனையும் அவரிடம் இருந்தது' - நெகிழும் இயக்குநர்கள்

'காக்க காக்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. சென்ற வருடம் இதே நாளில் அவர் காலமானார். அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தும் போது, “தம்பி டேனியல... மேலும் பார்க்க

Vikram: விக்ரமிடம் கதை சொன்ன இயக்குநர்கள்; மடோன் அஸ்வின் பட அப்டேட்

சின்னதொரு போராட்டத்திற்குப் பின் வெளியான 'வீர தீர சூரன் பாகம் 2' படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்ரம். அவரது ரசிகர்கள் பலரும் இயக்குநர் அருண்குமாரை, 'சைலன்ட் ஃபேன்... மேலும் பார்க்க

What to watch on Theatre & OTT: வீர தீர சூரன், L2 Empuraan, Mufasa - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

வீர தீர சூரன் பாகம் 2 வீர தீர சூரன் பாகம் 2S.U. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பா... மேலும் பார்க்க