செய்திகள் :

What to watch on Theatre & OTT: வீர தீர சூரன், L2 Empuraan, Mufasa - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

post image

வீர தீர சூரன் பாகம் 2

வீர தீர சூரன் பாகம் 2

S.U. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'.  ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரவுடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் போராடும் விக்ரமின் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது நேற்று (மார்ச் 27) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்: அசரடிக்கும் முதல் பாதி, மிரட்டலான மேக்கிங்; வாகை சூடுகிறானா காளி?

L2: Empuraan (மலையாளம், தமிழ்)

L2 Empuraan

L2: Empuraan Review: தெளிவான அரசியல், அடிப்பொலி மோகன்லால்; ஆனாலும் சோதிக்கும் சேட்டன் சினிமா!

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ், சச்சின் கெடெக்கர், விவேக் ஓபராய், அபிமன்யு சிங், சுகந்த் கோயல், இந்திரஜித் சுகுமாரன், ஃபாசில், சுராஜ் வெஞ்சாரமூடு உருவாகியிருக்கும் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'L2: Empuraan'. மதமும் அரசியலும் சேர்வது, திரியும் நெருப்பும் சேர்வது போன்றது என்ற அரசியலைச் சமரசமின்றி ஆக்‌ஷன் திரில்லர் கதையோடு சொல்லியிருக்கும் இத்திரைப்படம் நேற்று (மார்ச் 27) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

The Door (தமிழ்)

The Door

ஜெய்தேவ் இயக்கத்தில் பாவனா, வருண், ஜெயப்பிரகாஷ், நந்தகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'The Door'. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது நேற்று (மார்ச் 27) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Robinhood (தெலுங்கு)

Robinhood

வெங்கி இயக்கத்தில் நிதின், ஶ்ரீலீலா, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Robinhood'. ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நேற்று (மார்ச் 27) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Mad Square (தெலுங்கு)

Mad Square

கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நார்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Mad Square'. காமெடி, ஆக்‌ஷன் திரைப்படமான இது நேற்று (மார்ச் 27) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Sikandar (இந்தி)

sikandar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Sikandar'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் வரும் ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 30) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Black Bag (ஆங்கிலம்)

Black Bag

ஸ்டீவன் சோதர்பெக் இயக்கத்தில் கேட் பிளான்செட், மைகேல் பேஸ்பென்டர், மரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Black Bag'. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது நேற்று (மார்ச் 27) முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்

செருப்புகள் ஜாக்கிரதை (தமிழ்) - Zee5

ஓம் காளி ஜெய் காளி (தமிழ்) - Jio Hotstar

தியேட்டர் டு ஓடிடி

Mr. House Keeping (தமிழ்) - Aha

Aghathiyaa (தமிழ்) - Sun NXT

Anpodu Kanmani (மலையாளம்) - Amazon Prime Video

Sky Force (இந்தி) - Amazon Prime Video

The Outrun (ஆங்கிலம்) - Amazon Prime Video

Mufasa The Lion King (ஆங்கிலம்) - Jio Hotstar

Twilight of the Warriors: Walled In (ஆங்கிலம்) - Amazon Prime Video

Ajith: ``போட்டியை ஆதிக் என்ஜாய் பண்ணியிருப்பார்!'' - கால்பந்து போட்டிக்குப் பிறகு ஷாலினி பேட்டி

நேற்றைய தினம் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் மற்றும் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான ரொனால்டினோ, ரிவால்டோ... மேலும் பார்க்க

Ajithkumar : `தல வர்றாரு!'; இட்லி கடை திரைப்படம் பற்றி சூசகமாகப் பதிவிட்ட அருண் விஜய்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம் 'இட்லி கடை'. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். தனுஷுடன் அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மே... மேலும் பார்க்க

Jyothika: `Time flies!' - த்ரிஷாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்சி பதிவு

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் 'டப்பா கார்டெல்' வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. சூர்யாவும் ஜோதிகாவும் தங்களின் நட்பு வட்டத்திற்கு உணவு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விருந்தில் நடிகை த்ரிஷா, ர... மேலும் பார்க்க

Vijay Sethupathi: `போக்கிரி' பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி - அசத்தும் லைன் அப்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்', 'மஹாராஜா', 'விடுதலை பாகம் -2' போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிப்பைத் தாண்டி கடந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளரா... மேலும் பார்க்க