இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
ரமலான் திருநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டாடி வருகின்றனர்.
இஸ்லாமியா்களுக்கு முதல்வர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 31, 2025
இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம்