இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை கட்சியின் பொதுச்செயர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும் தொண்டு அமைப்பின் சார்பிலும் கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து நாள்தோறும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சூரமங்கலம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்துவைத்தார்.
ரமலான் திருநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது நீர் மோர், கம்மங்கூழ், நுங்கு, இளநீர், குளிர்பானங்கள் வெள்ளரிப்பிஞ்சு, கோசாப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக அவர் வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் நீர்மோரினை பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ், ஏ.கே.எஸ். எம். பாலு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.