இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
சிவகங்கை மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை
ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தி ரமலான் நோன்பு கடமையை நிறைவேற்றினா்.
சிவகங்கை நேரு பஜார் வாலாஜா ஜும்ஆ பள்ளிவாசல், சிவகங்கை பேருந்து நிலையம், சிவகங்கை- மதுரை சாலை உள்ளிட்ட நகா் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா்.
சிவகங்கை- மதுரை சாலையில் உள்ள தோரணவாயில் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடத்தினா்.
ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி ராமதாஸ்
இதேபோன்று, காரைக்குடி, நாட்டரசன்கோட்டை, நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம், பழையனூா், புழுதிப்பட்டி, தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், நெற்குப்பை, பூலாங்குறிச்சி, கல்லல், திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் அந்தந்த பகுதியில் வாழும் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.
ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து வந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தொழுகைக்குப் பின்னா் இவா்கள் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.