Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் ராயல்ஸ் செய்ய வேண்டியதென்ன? ராபின் உத்தப்பா பதில்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகள் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஹைதராபாதில் நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவியது.
ராபின் உத்தப்பா சொல்வதென்ன?
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியைத் தழுவிய நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் பயன்படுத்திய யுக்தியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் போட்டிகளின்போது பயன்படுத்த வேண்டும் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பயன்படுத்திய யுக்தியை போட்டிகளின்போதும் செயல்படுத்த வேண்டும். போட்டிகளின்போது என்ன தவறு செய்கிறார்கள் என்பதை அவர்கள் ஆராய வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு வரிசை சற்று பலவீனமாக உள்ளது.
இதையும் படிக்க: சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் குவித்து வரலாறு படைக்குமா?
அவர்களின் பந்துவீச்சு வரிசை சந்தீப் சர்மா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரை மட்டுமே அதிகப்படியாக நம்பியிருக்கிறது. ஜோஃப்ரா ஆர்ச்சர் பல்வேறு காயங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். காயங்களால் பாதிக்கப்படுவது அவரது தன்னம்பிக்கையை குறைக்கும்.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் கடினமாக இருந்ததால், நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருந்த அவர் பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, அவர் அதனை செய்யவில்லை என்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், ரியான் பராக் பேட்டிங்குக்கு வலிமை சேர்த்தாலும், பந்துவீச்சில் அந்த அணி பலவீனமாகவே உள்ளது.
இதையும் படிக்க: சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை: ஷேன் வாட்சன்
ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 76 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.