ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் இரண்டு மாற்றங்கள்!
மியாமி காலிறுதியில் மயங்கிய வீராங்கனை..! 4 ஆண்டுகளில் 3 முறை அரையிறுதிக்கு முன்னேறிய பெகுலா!
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டியில் எம்மா ரடுகானுவை பெகுலா வென்றார்.
இந்தப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா இங்கிலாந்தின் எம்மா ரடுகானுவை 6-4, 6-7(3), 6-2 செட்களில் வீழ்த்தினார்.
4 ஆண்டுகளில் 3 முறை அரையிறுதிக்கு முன்னேறிய பெகுலா
இந்தப் போட்டி 2 மணி நேரம் 25 நிமிஷங்கள் ஆனது. இந்தப் போட்டியில் வென்ற பெகுலா 4 ஆண்டுகளில் 3ஆவது முறையாக மியாமி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அரையிறுதியில் பிலிப்பின்ஸ்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவை நாளை (மார்ச்.28) சந்திக்கிறார்.
போராடி தோற்ற எம்மா ரடுகானு
2021இல் யுஎஸ் ஓபனை ரடுகானு வென்றிருந்தார். பிறகு காயம் காரணமாக பல சிக்கல்களை சந்தித்தார்.
மியாமி காலிறுதியில் பெகுலா முதல் செட்டை வெல்ல, 2ஆவது செட்டில் ரடுகானு மீண்டெழுந்து வந்தார்.
Ah there is that familiar sight again. An MTO for Raducanu getting her blood pressure checked. Just incase we thought it was an imposter on the court #MiamiOpenpic.twitter.com/BTpT7W5Xm9
— Little Miss Narcissist (@EmmaRaducant) March 27, 2025
போட்டியின் பாதியிலேயே மயக்கம் வருவதாகக் கூறி மருத்துவர்களை அழைத்து பரிசோதித்தார்கள்.
உடல்நிலைகுறைபாடு
மியாமியில் ஈரப்பதம் 70 சதவிகிதத்தினை நெருங்கியது. ரடுகானுவின் கழுத்துப் பகுதியில் ஐஸ்-பேக்கினை வைத்தார்கள். அவரது கால்களிலும் ஐஸ் பேக்கினை வைத்தார்கள்.
உடல்நிலை சரியாக இருந்திருந்தால் கடைசி செட்டில் வென்றிருப்பாரென அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Despite the loss, Emma Raducanu played one of the best matches this season!
— Tennis Xtra (@TennisXtra) March 27, 2025
Jessica Pegula just played incredible tennis in the third set!
Hope Raducanu stays fit because her level is increasing match by match! She can achieve great things in the future! pic.twitter.com/safhndA5iV