செய்திகள் :

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து!

post image

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் முதல் மாடியில் இன்று(மார்ச் 27) பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக வேப்பேரி பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விரைவாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பாதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

மின் வயரில் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதால் சிக்னல் தகவல் அனுப்புவதில் பிரச்னை ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை சரிசெய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க | 'இபிஎஸ் அவராகவே பதவி விலக வேண்டும்; இல்லையென்றால்...' - ஓபிஎஸ் எச்சரிக்கை!

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க