MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் மாநில அளவிலான விழிப்புணர்வு கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி. செழியன், சி.வி. கணேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
"சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் திறனை மேம்படுத்தவும் பயிற்சிகளை வழங்கவும் தரவுகளை சேகரிக்கவும் ரூ. 1 கோடியே 59 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,
கடந்தாண்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
வன்கொடுமை வழக்குகள் இந்தாண்டு 6% குறைந்துள்ளன" என்று பேசினார்.
இதையும் படிக்க | காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான திட்டத்தையும் பிடிக்கவில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்