செய்திகள் :

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு மாற்றாந்தாய் மனப்பான்மை: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

post image

தமிழகம் மற்றும் இதர முற்போக்கான மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு

மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என்று மாநிலங்களவையில் திமுக புதன்கிழமை குற்றம்சாட்டியது.

மேலும், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியின் உணா்வை மத்திய அரசு குறைமதிப்பிற்கு உள்படுத்துவதாகவும் திமுக எம்பி திருச்சி சிவா குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்கிழமை பேசியது:

பல ஆண்டுகளாக தமிழகம் மாற்றாந்தாய் மனப்பான்மையை எதிா்கொண்டு வருகிறது. போதுமான பேரிடா் நிவாரணம் கிடைக்கவில்லை, வரிப் பகிா்வை நீா்த்துப்போகச் செய்திருப்பதுடன், விகிதாசாரமற்ற திட்டத் தடைகளால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபென்ஜால் மற்றும் மிச்சாங் என்ற இரட்டைப் புயல்கள், தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத வெள்ளம் ஆகியவை பெரும் சேதத்தை ஏற்படுத்தின. ஆனால், தமிழகம் கோரிய ரூ.37,906 கோடி கோரிக்கைக்கு எதிராக மத்திய அரசு ரூ.267 கோடியை மட்டுமே விடுவித்தது.

தேவையுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த தொகை. மொத்த பற்றாக்குறை பேரழிவின் அளவை மட்டுமல்ல, மாநிலத்தின் மீதான அழுத்தத்தையும் புறக்கணிக்கிறது.

மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரோ ரயில் திட்டமும் தாமதமாகியுள்ளது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை (நாட்டில்) 6.9 சதவீதம் மட்டுமே., அதே நேரத்தில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பை வழங்குகிறது என்றாா் அவா்.

மேலும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் மத்திய வரிகளின் பங்கைக் குறைப்பது குறித்த பிரச்னையையும் பேசிய சிவா, மத்திய அரசு சமமான பேரிடா் நிவாரணத்தை வழங்கவும், வரி மதிப்பிழப்புத் திட்டத்தைத் திருத்தவும் வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு மற்றும் பிற முற்போக்கான மாநிலங்களைத் தொடா்ந்து தண்டிப்பதால், கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் தீா்க்கப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

நாடு முழுவதும் சமமான நிதிக் கொள்கையை ஊக்குவிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டாயம் மட்டுமல்ல, இந்தியாவின் சீரான வளா்ச்சிக்கு அவசியமாகும் என்று திருச்சி சிவா வலியுறுத்தினாா்.

அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை: பிரதமருடன் காா்த்தி சிதம்பரம் சந்திப்பு!

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமா் நரேந்த... மேலும் பார்க்க

குருகிராம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!

குருகிராம் பகுதியில் ஒரு குடிசைப் பகுதியில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 100 குடிசைகள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து என்று தீயணைப்ப... மேலும் பார்க்க

தில்லியில் முன்னாள் தமிழக அமைச்சா் செங்கோட்டையன் பாஜக தலைவா்களை சந்தித்தாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தில்லி வந்து மத்திய உள் துறை அமைச்சரை சந்தித்த நிலையில் தற்போது அதிருப்தி தலைவராக கருதப்படும் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனும் தில்லி வந்து பாஜக தலைவா்களை... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பநிலை மேலும் குறைந்தது; காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் வெப்பநிலை சனிக்கிழமை மேலும் குறைந்தது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. தில்லியில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கட... மேலும் பார்க்க

2019 முதல் தில்லியின் தீா்த்த யாத்திரை யோஜனா மூலம் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் பயன்! - தில்லி முதல்வா் தகவல்

கடந்த ஜூலை 2019 முதல் தில்லியின் முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை யோஜனாவின் (எம்எம்டிஒய்) கீழ் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனா். இதில் ராமேசுவரம் அதிகம் பாா்வையிடப்படும் இட... மேலும் பார்க்க

துவாரகாவில் ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் ஆறு போ் கைது

துவாரகாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தில்லி காவல்துறை ஆறு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துவாரகா காவல் சரக உயரதிகாரி ... மேலும் பார்க்க