செய்திகள் :

பாக். ஒருநாள் தொடர்: நியூசி. கேப்டன் லதாம் விலகல்! புதிய கேப்டன் யார்?

post image

பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் கேப்டனான டாம் லதாமுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மொத்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், அவருக்குப் பதிலாக டி20 தொடரின் கேப்டனான மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

டாம் லதாமுக்குப் பதிலாக இளம் வீரர் ஹென்றி நிக்கோல்ஸுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தொடக்க ஆட்டக்காரர் வில் யங்கிற்கு முதல் குழந்தை பிறக்கவிருப்பதால் அவர் கடைசி 2 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்குப் பதிலாக ரைஸ் மரியுவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 12 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள ரைஸ் மரியு 328 ரன்கள் குவித்திருக்கிறார்.

நியூசிலாந்து அணி விவரம்

முகமது அப்பாஸ், ஆதி அசோக், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஹென்றி நிக்கோல்ஸ், மார்க் சாம்ப்மேன், ஜேக்கப் டஃப்பி, மிட்ச் ஹெய், நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓரூர்க், பென் ஸீர்ஸ், நாதன் ஸ்மித், வில் யங்(1 போட்டி மட்டும்), ரைஸ் மிரியு.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இங்கிலாந்து தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகலா?

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு எதிராக ஒளிந்துகொள்ள இடம் கிடையாது; ஜோ ரூட் சொல்வதென்ன?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 ... மேலும் பார்க்க

29 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற தெற்கு ஆஸ்திரேலியா!

ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப... மேலும் பார்க்க

சாப்மன் சதம்: 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.டி20 தொடரை 4-1 என வென்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் இருகிறது. முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகிறாரா ஜோ ரூட்?

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஜோ ரூட் மனம் திறந்துள்ளார்.அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பா... மேலும் பார்க்க

இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக விளையாடி டி20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு... மேலும் பார்க்க