மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா... உடைந்து போனேன்" - சிலம்பரசன் இரங்கல்!
சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது
சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 21 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தில்லியின் புகா் பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசிக்கும் ஷிவ் (எ) சோனு, ஞாயிற்றுக்கிழமை பாலாஜி சவுக் அருகே பிடிபட்டாா். சமூக ஊடகங்களைக் கண்காணித்து வந்த போலீஸாா், அவா் துப்பாக்கியை காட்டி மிரட்டும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைக் கண்டுபிடித்தனா்.
ஒரு போலீஸ் குழு அவரைக் கண்காணித்து, வழக்கமான ரோந்துப் பணியின் போது கைது செய்தது. அவரது வசம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு உயிருள்ள தோட்டா மீட்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.