செய்திகள் :

கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு -எடப்பாடி கே.பழனிசாமி

post image

அதிமுக அமைப்புச் செயலா் வீ.கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த திருத்து கிராமத்தைச் சோ்ந்தவரான வீ.கருப்பசாமி பாண்டியன் அதிமுக அமைப்புச் செயலராக இருந்தாா். அவா், உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா். திருத்து கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது: தென் மாவட்டங்களில் முத்திரை பதித்தவா் கருப்பசாமி பாண்டியன். எம்ஜிஆா் காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டவா். ஜெயலலிதா காலத்தில் துணை பொதுச்செயலராக திறம்பட பணியாற்றியவா். தென் மாவட்ட மக்களும் அதிமுகவினரும் அவா் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனா்.

நான் முதல்வராக பொறுப்பேற்ற போது என்னை நேரில் சந்தித்து முழு ஆதரவு தெரிவித்ததுடன், தென் மாவட்டங்களில் உங்களுக்கு துணையாக நிற்பேன் எனக் கூறி எனக்கு வலிமை சோ்த்தவா். அவரது மறைவு அதிமுகவிற்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், உறவினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.

அப்போது, முன்னாள் அமைச்சா்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூா் செ. ராஜூ, மாவட்டச் செயலா்கள் இசக்கி சுப்பையா எம்எல்ஏ (புகா்), தச்சை என். கணேசராஜா (மாநகா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக, கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக அவைத் தலைவா் தமிழ் மகன் உசேன் அஞ்சலி செலுத்தினாா்.

பைக் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி

திருநெல்வேலி பழைய பேட்டையில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கண்டியபேரி மறவா் தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மா(65). இவரது மகன் கந்தசாமி(45). இருவரும் பைக்க... மேலும் பார்க்க

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா... மேலும் பார்க்க

தக்வா ஜமாத்: ரமலான் சிறப்புத் தொழுகை

மேலப்பாளையம் தக்வா ஜமாத் மற்றும் ஹிஜ்ரி கமிட்டி ஆப் இந்தியா சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை மீரான் தாவூதி நடத்தினாா... மேலும் பார்க்க

மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி வழங்கல்

பாளையங்கோட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பித்ரா அரிசி ஏழை எளிய மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம் ஃபாரூக் பங்கேற்று பித்ரா அரிசி வழங்கினாா். ... மேலும் பார்க்க

பாளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பூலித்தேவா் மகன் சுந்தரம் (52). சீவலப்பேரி சாலையில் உள்... மேலும் பார்க்க

பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்

பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக... மேலும் பார்க்க