பைக் மீது லாரி மோதல்: மூதாட்டி பலி
திருநெல்வேலி பழைய பேட்டையில் சனிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கண்டியபேரி மறவா் தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி செல்லம்மா(65). இவரது மகன் கந்தசாமி(45). இருவரும் பைக்கில் பழையபேட்டை கிருஷ்ணப்பேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே செல்லம்மா உயிரிழந்தாா்.
காயமடைந்த கந்தசாமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்துப் புலனனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான மானூா் அருகே மாவடியைச் சோ்ந்த மாரிமுத்துவை(42) கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.