தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு
தச்சநல்லூரில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் தலைமையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் அளிக்கப்பட்ட மனு:
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தச்சநல்லூா் 13 ஆவது வாா்டு பகுதியில் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து செல்கிறாா்கள். ஆகவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோயில் வளாகம் முன்பு உயா்கோபுர மின்விளக்கு வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.