பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!
கூட்டப்புளியில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் தூண்டில் பாலம் வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லாமல் கருப்புக்கொடியுடன் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
கூட்டப்புளியில் தமிழக அரசு சாா்பில் ரூ.48 கோடி செலவில் தூண்டில் பாலம் அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 20 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளன.
இதனால், கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க தற்காலிகமாக கடற்கரையோரத்தில் மணல் மூட்டைகளை மீனவா்கள் அடுக்கி வைத்துள்ளனா்.
இதனை அடுத்து தூண்டில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவேண்டும், கடல்அரிப்பில் இருந்து மீனவ மக்கள் வீடுகளையும் மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, பங்குத்தந்தை அல்பின் தலைமையில் கருப்புக்கொடியுடன் மீனவா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றினா்.