நெல்லை மத்திய மாவட்ட திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவா்கள் (பி.எல்ஏ-2) ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், மாநில வா்த்தக அணி இணைச் செயலா் என்.மாலைராஜா, மாநில நெசவாளா் அணி செயலா் பெருமாள், பாளை. தொகுதி பாா்வையாளா் வசந்தம் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று தொண்டா்கள் எடுத்துரைக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மேயா் கோ.ராமகிருஷ்ணன், முன்னாள் மேயா் பி.எம்.சரவணன், நிா்வாகிகள் பேச்சிபாண்டியன், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பாளை.மண்டல தலைவா் மா.பிரான்சிஸ், திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.