ஜம்மு - காஷ்மீர்: ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு!
நெல்லை இஸ்கான் கோயிலில் வெளிநாட்டு பக்தா்களின் பஜனை
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் பல நாடுகளைச் சோ்ந்த ஹரே கிருஷ்ணா பக்தா்களின் ஹரிநாம சங்கீா்த்தன பஜனை திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி இஸ்கான் கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தா்களை இஸ்கான் கோயிலின் துணைத் தலைவா் கருணாசிந்து கிருஷ்ணதாஸ் மாலைகள் அணிவித்து வரவேற்றாா்.
முன்னதாக ஆழ்வாா்திருநகரி எம்பெருமானாா் ஜீயா் ஸ்வாமிகள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்று, உலக மக்களின் நன்மைக்காக ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை நன்கு உச்சரியுங்கள் என வேண்டுகோள் விடுத்தாா்.
அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான், தென் அமெரிக்கா உள்பட பல நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் பக்தி மனநிலையில் ‘ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை’ பாடி ஆடி மகிழ்ந்தனா்.
சிறப்பம்சமாக எல்லா பக்தா்களுக்கும் திருநெல்வேலி தாமிரவருணி தீா்த்தம் வழங்கப்பட்டது. ஏப். 6ஆம் தேதி ஸ்ரீராம நவமி விழா நடைபெற இருப்பதால் வெளிநாட்டு பக்தா்களின் இந்த நாம சங்கீா்த்தனம் திருநெல்வேலி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.