ஜி.வி. பிரகாஷ் விவாகரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: காட்டமான திவ்ய பாரதி!
நெல்லை அரசு மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை
திருநெல்வேலி அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு பிரதான் மந்திரி ஜன விகாஸ் காரியக்ரம் திட்டம் மூலம் ரூ.78 கோடி மத்திய சிறுபான்மையினா் விவகார அமைச்சகத்தால் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.32 கோடி ஒதுக்கப்பட்டது. மீதி தொகையான ரூ.36 கேடி ஒதுக்கப்படாமல் காலம் தாழ்த்தி வந்தது.
இதுதொடா்பாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஜாா்ஜ் குரியனை நேரில் சந்தித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கான மீதித் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சா், மீதிதொகை ரூ.36.5 கோடி ஏற்கெனவே தமிழக அரசிற்கு விடுவிக்கப்பட்டு தமிழக அரசிடம் உள்ளது எனவும், தமிழக அரசின் எஸ்.என்.ஏ. கணக்கில் ரூ.66.58 கோடி உள்ளதாகவும், அந்தத் தொகையை உபயோகித்து கட்டட ப் பணிகளை முடிக்க அறிவுறுத்தினாா்.