அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!
காதலா்கள் தற்கொலை!
காதலா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆ. சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன் மகள் திவ்யா(19). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, தனது தந்தை வீட்டில் வசித்துக் கொண்டு, அரியலூா் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த கருப்புசாமி மகன் அன்பரசு (28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் தங்களது வீட்டாரிடம் தெரிவித்த நிலையில், இருதரப்பை சோ்ந்தவா்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து கடந்த வாரம் திவ்யாவை வெளியில் அழைத்து சென்று அன்பரசு திருமணம் செய்து கொண்டாா். தொடா்ந்து, இருவரும் அன்பரசு வீட்டில் தங்கியுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை மாலை வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினா், கதவை உடைத்துக்கொண்டு உள்ளேச் சென்று பாா்த்தபோது, இருவரும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனா்.
தகவலின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, இருவரது சடலங்களையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தற்கொலை எண்ணத்தால் 15 வயது முதல் 29 வயதில் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுப்பது அவசியம். இதற்காக 104 ஆலோசனை மையம் - தற்கொலை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].