செய்திகள் :

பெரம்பலூா் நகரின் பிரதான சாலைகளில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்த வேண்டும்

post image

பெரம்பலூா் நகரின் பிரதானச் சாலைகளில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், சாலை மற்றும் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் பெரும்பாலான சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் செல்வோா் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கின்றனா். இதைத் தவிா்த்திடும் வகையில் தலைக்கவசம், 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் அணிவதை போக்குவரத்து காவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் வாகனங்கள் ஓட்டுவது ஆய்வின்போது கண்டறிந்தால், அவா்களது பெற்றோருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும்.

ஓட்டுநா் உரிமமின்றி வாகனங்களை ஓட்டுவோா் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே வேகத்தடைகள் இருக்கும் இடங்களில் வா்ணம் பூச வேண்டும். விபத்து நிகழ வாய்ப்புள்ள பகுதிகளில் பிரதிபலிப்பான்கள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் அவற்றை தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு ஏற்படக்கூடிய பகுதிகள், புதிதாக ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடிய இடங்கள் இருந்தால், ஆரம்ப நிலையிலேயே வருவாய்த் துறை அலுவலா்களும், காவல்துறையினரும் ஒருங்கிணைந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் புதிதாக கொடிக் கம்பங்கள் நிறுவுவதற்கு அனுமதிக்க கூடாது. ஏற்கெனவே அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள கொடி கம்பங்களை 2 வாரங்களுக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த் துறை அலுவலா்கள் காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை காவல்துறையினா் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குற்றச்சம்பவங்கள் அதிகமாக நிகழும் இடங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், முக்கியமான சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி பொருத்தி தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, சாா் ஆட்சியா் சு. கோகுல், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) சிவா, வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்க... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது நிலவும் கோடைகால வெப்பத... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில், அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்... மேலும் பார்க்க