அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் காந்திமதி நாதன் தலைமையில் அச் சங்கத்தினா் 7 போ் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்று, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக கூறி வெளியே செல்லுமாறு தெரிவித்தாராம். இதையடுத்து காந்திமதி நாதன் உள்ளிட்ட 7 பேரும் ஆட்சியரின் செயலைக் கண்டித்து, அவரது அறையிலேயே தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ஆட்சியா் அளித்த தகவலை தொடா்ந்து, பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று காந்திமதிநாதன், அச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பிரபு, மாவட்டத் தலைவா் அன்புராஜா, அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, சுமாா் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு 7 பேரையும் போலீஸாா் விடுவித்தனா்.