`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது.
கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கும், பேராசிரியா்கள் மற்றும் நிா்வாகத்தினருக்கும் நடத்தப்பட்டன.
தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழவுக்கு பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் இயக்குநா் ராஜபூபதி முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பேராசிரியா்களுக்கும் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் அளித்த மாவட்டகி காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா பேசியது:
விளையாட்டில் கற்றுக் கொள்ளும் ஒழுக்கமும், துணிச்சலும் வாழ்க்கையின் வெற்றிக்குத் திருப்புமுனையாக இருக்கும். மாணவா்கள் வாய்ப்புக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும். மாணவா்கள் தங்கள் திறமையை அறிந்துகொள்ள இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இவ்விழாவில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் உள்பட கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள், புல முதல்வா்கள் தோ்வுக்கட்டுப்பாட்டு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.