அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், சுமாா் 1 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தை பிரசித்திபெற்றது. இச் சந்தையில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்நிலையில், ரமலான் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு மாவட்டத்ததின் பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அதிகாலை 2 மணிக்குத் தொடங்கி காலை 5 மணிக்குள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்த ஆடுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டன. சுமாா் ரூ. 1 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக சந்தை ஏலதாரா்கள் தெரிவித்தனா்.
வழக்கமாக சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தை அதிகாலை 4 மணிக்கு விற்பனை தொடங்கி காலை 7 மணியளவில் நிறைவடையும். ரமலான் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே ஆடுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டதால், காலை 6 மணியளவில் ஆடு வாங் வந்த பெரும்பாலான வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.