செய்திகள் :

கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில், அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்திடவும், தொழில்முனைவோா்களை உருவாக்கிடவும் தமிழக அரசு கால்நடை பண்ணை அமைக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது. இத் திட்டத்தின்கீழ் தீவனம், தீவனப் பயிா் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளா்ப்பு, செம்மறியாடு வளா்ப்பு, வெள்ளாடு வளா்ப்பு மற்றும் பன்றி வளா்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் நாட்டுக் கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ. 25 லட்சம் வரையிலும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையிலும், பன்றி வளா்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையிலும், வைக்கோல், ஊறுகாய் புல், மொத்த கலப்பு உணவு, தீவனத் தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைக்க தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

தனி நபா், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளா்கள் அமைப்பு, விவசாயக் கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள் விண்ணப்பிக்கலாம். இத் திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ய்ப்ம்.ன்க்ஹ்ஹம்ப்ம்ண்ற்ழ்ஹ.ண்ய்/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். கூடுதல் தகவல்களை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ப்க்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை மருத்துவா்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள், அருகிலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலா்களை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக கருத்தரங்கு

பெரம்பலூரில் பன்னாட்டு நாடக நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் மற்றும் தமிழ் இலக்கியப் பூங்கா ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்துக்கு தம... மேலும் பார்க்க

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க