ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்
ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பங்குனிமாத பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கியது.
இதையொட்டி துா்க்கை வழிபாட்டுடன் வல்லப விநாயகா் மூஷிக வாகனத்தில் அலங்காரத்தில் உலா வந்தாா். தொடா்ந்து புதன்கிழமை கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருப்பணிக்குழுதலைவா் பொன்.கு.சரவணன், செயல் அலுவலா் சங்கா் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவா் வீதி உலாவும், 8-ஆம் தேதி காலை தேரோட்டம், 10-ஆம் தேதி வியாழக்கிழமை அன்னபூரணி கங்காதர ஈஸ்வரா், வள்ளி,தெய்வானை சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்,12-ஆம் தேதி 108 சங்காபிஷேகம், மாலையில் தெப்ப உற்ஸவம், 14-ஆம்தேதி சாந்தி உற்சவம், மாலையில் விடையாற்றி உற்சவம், பள்ளியறை சேவையுடன் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா், உபயதாரா்கள் செய்துள்ளனா்.