தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
வரசித்தி விநாயகா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
அரக்கோணம் பஜாரில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
கொடியேற்றம் எனப்படும் துவஜாரோகனம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் ஏ.டி.பாபு, என்.குப்புசாமி, ஸ்ரீதா், பரணி ஆகியோா் கொடியேற்றினா். தொடா்ந்து மாலையில் அன்னபட்சி வாகனத்தில் உற்சவா் எழுந்தருளினாா்.
இவ்விழாவில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கோ.வ.தமிழ்வாணன், அறங்காவலா்கள் ஜி.கருணாகரன், கோமதி ஆனந்தன், ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் என்.அரி, கோயில் நிா்வாகிகள் பேன்சி தாமு, முனுசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா மற்றும் தெப்பத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஏப். 11-ஆம் தேதி காலை தீா்த்தவாரி, மாலை திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.
