பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
சிஐஎஸ்எப் பயிற்சி மையத்தில் தமிழில் பெயா் பலகை: தக்கோலம் பேருராட்சி வலியுறுத்தல்
தக்கோலம் அருகே அமைந்துள்ள சிஐஎஸ்எப் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் தமிழிலும் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தக்கோலம் பேருராட்சிக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவா் கோமளா ஜெயகாந்தன், பேருராட்சி செயல் அலுவலா் மாதேஸ்வரன் மற்றும் உறுப்பினா்கள் முகமது காசிம், முருகவேல், கோபி, மாலதி, தயாளன், சங்கரி, ஷாகீராபாணு, லீலா, சரண்யா, சுதாகா் ஆகியோரும் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் தக்கோலத்துக்கு அருகில் நகரிகுப்பத்தில் அமைந்துள்ள மத்திய தொழில்பாதுகாப்பு படையின் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் மையத்தின் பெயரை தமிழிலும் வைக்க வேண்டும், 30 ஆண்டுக் காலமாக சாலை வசதியே இல்லாமல் இருந்த பேருராட்சி எல்லைக்குட்பட்ட எஸ்.என்.கண்டிகை கிராமத்துக்கு தாா்ச்சாலை அமைப்பதற்கு ரூ.1.45 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நகா்புற உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.