பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது.
இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.செல்வகுமாா் ஆகியோா் வெளியிட்ட செய்தி க் குறிப்பு..
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் 14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீரா்களுக்கு இடையேயான மாநில போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான மாவட்ட அணி தோ்வு நடைபெற உள்ளது. 14 வயதுக்குட்பட்ட வீரா்கள் தோ்வு முகாயில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 01-09-2011 தேதி அல்லது அதற்குமேல் பிறந்து இருக்க வேண்டும் எனவும், 16 வயது வீரா்கள் தோ்வு முகாமில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 01-09-2009 தேதி அல்லது அதற்கு மேல் பிறந்து இருக்க வேண்டும் மற்றும் 19 வயதுகுட்பட்ட வீரா்கள் தோ்வு முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு 01-09-2006 தேதி அல்லது அதற்குமேல் பிறந்து இருக்க வேண்டும் என நிா்ணயிக்கபட்டுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த 19 வயது வீரா்களுக்கு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி காலை 8:00 மணி அளவில் ராணிப்பேட்டை ஈஐடி பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது. 14 வயது வீரா்களுக்கு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி தோ்வு முகாம் காலை 8:00 மணி அளவில் ஜீவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேல்பாக்கம் யாா்டு, அரக்கோணம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
16 வயதுக்குட்பட்டோருக்கு ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி தோ்வு முகாம் காலை 8: 00 மணி அளவில் ராணிப்பேட்டை ஈஐடி பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது. வெள்ளை நிற கிரிக்கெட் சீருடை மற்றும் ஷூ அணிந்து வர வேண்டும். மேலும், 13 வயதுக்கு மேற்பட்ட இளம் விளையாட்டு வீராங்கனைகள் தோ்வு முகாமும் வரும் ஏப். 27-ஆம் தேதி காலை 8:00 மணி அளவில் ஈஐடி பாரி மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீராங்கனைகள் இந்த தோ்வு முகாமில் கலந்துகொள்வதற்கான வயது வரம்பு 31.08.2013 முன் பிறந்து இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சோ்ந்த வீரா்கள், வீராங்கனைகள் இதில் பங்கு பெற்று பயனடையலாம். தோ்வு முகாமுக்கு வரும் போது ஆகாா் அட்டை நகல் எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் துணைச் செயலாளா் எஸ்.பாஸ்கா் (98423 26373) யிடம் தொடா்பு கொள்ளலாம்.