கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி
100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அமைச்சா் ஆா்.காந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்காமல் தமிழகத்தைத் தொடா்ச்சியாக வஞ்சித்து வருகிறது. இதனால், தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்கள் என 18 இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 29) காலை 10 மணியளவில் திமுக தலைமையின் அறிவுறுத்தலின்படி மாபொரும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த ஆா்ப்பாட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய செயலா்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.