மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ
நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது.
நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த பூபதி (42) என்பவருக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கைப்பேசி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், நெகிழிப் பொருள்கள் இங்கு கொண்டு வரப்பட்டு அவை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது.
இந்தக் கிடங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. தீ மளமளவென அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியதில், கிடங்கு முழுவதும் தீயில் எரிய தொடங்கியது. இதனால் பெரும் கரும்புகை எழுந்தது.
தகவல் அறிந்து ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் இருந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இது குறித்து நெமிலி காவல் நிலையத்தில் பெருவளையம் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அளித்த புகாரில், அந்தக் கிடங்கு எவ்வித அனுமதியும் பெறாமல் நடத்தப்பட்டதும், தீ விபத்து தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நிலை இருந்ததும் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.