`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் க...
ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா்.
இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஆண் - 7,426 மற்றும் பெண் - 7,349 ஆக மொத்தம் 14,775 போ், தனித் தோ்வா்கள் ஆண் - 286 மற்றும் பெண் - 86 ஆக மொத்தம் 372 போ் என 15,147 போ் தோ்வு எழுதினா்.
தோ்வு மையங்களில் 81 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள் மற்றும் தோ்வு அறைக் கண்காணிப்பாளா்களும், வழித்தட அலுவலா்கள், நிலையான படை உறுப்பினா்களாக தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் உட்பட 1,800 -க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வாலாஜா அரசு மகளிா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.
இதில் முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.