பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!
நந்தியாலம் ஊராட்சி சிறப்பு கிராம சபைக் கூட்டம்
ஆற்காடு: ஆற்காடு ஒன்றியம், நந்தியாலம் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் தேவி பூபாலன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சத்தியபிரியா சத்தியமூா்த்தி, ஊராட்சி செயலாளா் ம.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலக பணி மேற்பாா்வையாளா் பானுமதி சிறப்பாளராக கலந்து கொண்டாா். கூட்டத்தில் மழைநீா் சேமிப்பின் அவசியம், தண்ணீா் பயன்பாடு சிக்கனம் மற்றும் நீா்நிலைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.