ஏப்ரல் 8 முதல் ரூ.62,000 வரை விலையை உயர்த்தும் மாருதி சுசூகி!
Greenland: தொடர்ந்து 28 ஆண்டுகளாக உருகும் பனிப்பாறைகள் - என்னவாகும் கிரீன்லாந்து?
பூமி வெப்பமடைதல் காரணமாக உலகம் முழுவதும் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இது ஆர்க்டிக் பனிப்படலங்களில் அதிகமாக காணப்படுகிறது.
உலகின் நன்னீரில் 8 சதவீதத்தை கொண்ட கிரீன்லாந்தின் பனிப்படலம் தொடர்ந்து 28 ஆண்டுகளாக உருகி வருகிறது.
கிரீன்லாந்து நாட்டின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (NOAA) அமைப்பு இது குறித்து கூறுகையில், "2023 மற்றும் 2024 -ம் ஆண்டுகளில் இலையுதிர்காலத்தில் சுமார் 55 ஜிகாடன் பனியை கிரீன்லாந்து இழந்துள்ளது. மேலும்,1992 முதல் 5 டிரில்லியன் டன்களுக்கும் அதிகமான பனியை கிரீன்லாந்து இழந்துள்ளது." என்றும் தெரிவித்துள்ளது.

நீர் ஆவியாக மாற்றப்படும் பனியின் அளவை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
"நீராவி எங்கு செல்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில பனியாகவே கீழே விழலாம் அல்லது சிலவை மேற்பரப்பில் மீண்டும் படியக்கூடும், சிலவை கிரீன்லாந்தின் நீர் அமைப்பை விட்டே வெளியேறக்கூடும்" என்று ஆய்வாளர் கெவின் ரோஸ்மியாரெக் கூறுகிறார்.
மேலும் "வெப்பமயமாதலால் கிரீன்லாந்திற்கு என்ன நடக்கப் போகிறது என்பதை முடிந்தவரை துல்லியமாக கணிப்பது மிகவும் முக்கியம்" என்றும் ரோஸ்மியாரெக் கூறியுள்ளார்.