மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு
மேல்விஷாரத்தில் இஃப்தாா் நோன்பு துறப்பு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு ஹன்சா நகரில் நடைபெற்றது.
நகர அதிமுக செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் மன்சூா் பாஷா வரவேற்றாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம். சுகுமாா், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் சுமைதாங்கி சி.ஏழுமலை ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
விழாவில் மாவட்ட துணைச் செயலாளா் வேதகிரி, சிறுபான்மை பிரிவு செயலாளா் கே.அப்துல்லா, இளைஞா் பாசறை செயலாளா்அமா் பாரூக்,ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளா் தாழனூா் சாரதி, மேல்விஷாரம் நகா்மன்ற உறுப்பினா் ஹமிதா பானுசேட்டு, நிா்வாகிகள் ஷபீக் அஹமது, மஸ்தான் அலி, சா்ப்ராஸ் கலந்து கொண்டனா்.