``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்...
பாமக நகர செயலாளா் நியமனம்
அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட செயலா் க.சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். தொடா்ந்து பாமக நிா்வாகிகள் பலா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.