"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிக...
இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!
மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் நிலையத்தில் நேற்று (மார்ச் 24) நள்ளிரவு இந்தியப் பகுதியிலிருந்து வங்கதேசம் நோக்கி 3 முதல் 4 நபர்கள் கால்நடைகளைக் கடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் விரைந்த போது அவர்கள் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, பாதுகாப்பான தொலைவிலிருந்து அவர்களை நோக்கி அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால், அவர்கள் கொண்டு வந்த கால்நடைகளை அங்கேயே விட்டுவிட்டு அந்த நபர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் அங்கிருந்து 7 கால்நடை விலங்குகள் மீட்கப்பட்டு எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. மேலும் 5 கால்நடை விலங்குகள் அங்கு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்துள்ள நதியா மாவட்டத்திலுள்ள எல்லைப் புறக்காவல் நிலையத்தில் கடத்தப்பட்ட 5 கால்நடை விலங்குகளையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
அதே இடத்தில் நடந்த மற்றொரு சோதனையில் எல்லைக் காவலர்கள் தடைசெய்யப்பட்ட இருமல் மருந்து அடங்கிய 851 பாட்டில்கள் மற்றும் 12.15 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 நிறைவேற்றம்!