உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்
உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் என நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளன் பிலிப்ஸ் அவரது பிரம்மிக்க வைக்கும் ஃபீல்டிங் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியவர். கிரிக்கெட் திடலில் அவர் பறந்து பிடிக்கும் பல கேட்ச்சுகள் இணையத்தில் மிகவும் வைரலாவது வழக்கம். அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் தனது சூப்பர் மேன் வித்தைகளை ஃபீல்டிங்கில் காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதையும் படிக்க: நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?
விமானியாக விரும்பிய கிளன் பிலிப்ஸ்
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடவுள்ள கிளன் பிலிப்ஸ், உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் எனக் கூறியுள்ளார்.
GP playing flight simulator well, that just makes sense
— Gujarat Titans (@gujarat_titans) March 23, 2025
the entire video, only on Titans FAM App: https://t.co/A6c8oDJe0Npic.twitter.com/JaKEC7V3me
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விமானியாக வேண்டும் என்பது என்னுடைய மிகப் பெரிய கனவு. என்னுடைய இளமைப் பருவத்தில் நான் கிரிக்கெட் விளையாடாமல் உலகின் மொத்த பணமும் என்னிடம் இருந்திருந்தால், நான் அநேகமாக விமானியாக மாறியிருப்பேன். காற்றில் பறக்க வேண்டும் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். விமானியாக கடைபிடிக்கும் அனைத்து விஷயங்கள் மீதும் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. எனக்கு ஏன் இந்த அளவுக்கு வானில் பறப்பதற்கு பிடிக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், வானில் பறப்பவர்களுக்கும் அவர்களுக்கு ஏன் வானில் பறப்பது அவ்வளவு பிடிக்கிறது எனத் தெரியாது என நினைக்கிறேன்.
இதையும் படிக்க:ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, மலைகளுக்குச் சென்று எனக்கு பிடித்தமான விஷயங்களை செய்வேன். அதில், முதலாவது தெரிவாக விமானத்தை இயக்குவதே இருக்கும். மற்ற விளையாட்டுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்களது பிரதான துறைக்கு உதவியாக இருக்கும். எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கோல்ஃப் விளையாடுவேன். கோல்ஃப் விளையாடும்போது, மனம் மிகவும் அமைதியாக இருக்கும். வில்வித்தையில் ஈடுபடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற விளையாட்டுகளில் கற்றுக்கொண்ட விஷயங்கள் கிரிக்கெடில் எனக்கு உதவியது என்றார்.