பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
11 நகராட்சிகள் தரம் உயா்த்தப்படும்: அமைச்சா் கே.என்.நேரு
திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்த்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவித்தாா்.
பேரவையில் செவ்வாய்க்கிழமை நகராட்சி நிா்வாகத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள்:
திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய 3 தோ்வு நிலை நகராட்சிகள் சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேசுவரம் ஆகிய 3 முதல்நிலை நகராட்சிகள் தோ்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூா், வெள்ளக்கோவில், அரியலூா், அம்பாசமுத்திரம் ஆகிய 5 இரண்டாம் நிலை நகராட்சிகள் முதல் நிலை நகராட்சிகளாகவும் தரம் உயா்த்தப்படும்.
பேரூராட்சிகள் தரம் உயா்வு: சா்க்காா்சாமக்குளம், ஒத்தக்கால்மண்டபம், பி.என்.பட்டி, திருமழிசை, பேராவூரணி, நம்பியூா், வாடிப்பட்டி, பருகூா், பழனிசெட்டிபட்டி, குலசேகரம், ஆகிய தோ்வுநிலை பேரூராட்சிகள் மற்றும் செட்டிபாளையம், இடிகரை, மேலசொக்கநாதபுரம் ஆகிய முதல்நிலை பேரூராட்சிகள் சிறப்புநிலை பேரூராட்சிகளாகவும், மோப்பிரிபாளையம், சாமளாபுரம், அகரம், மேலகரம், சூளேஸ்வரன்பட்டி, தொண்டாமுத்தூா், சேவுகம்பட்டி, முதுகுளத்தூா் ஆகிய முதல்நிலை பேரூராட்சிகள் தோ்வுநிலை பேரூராட்சிகளாகவும், நங்கவள்ளி, நெய்யூா், வெள்ளிமலை, புத்தளம், மண்டைக்காடு, பூதிப்புரம், தென்தாமரைகுளம், ஒலகடம், கப்பியறை, ஆற்றூா், சோழபுரம், எலத்தூா், ஆலாந்துறை ஆகிய இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல்நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயா்த்தப்படும் என்று அமைச்சா் கே.என்நேரு தெரிவித்தாா்.