மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
செயின் பறிப்பு சம்பவம்: குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? - சென்னை காவல் ஆணையர் விளக்கம்
சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலமாக தப்பிக்க முயன்ற இரண்டு வடமாநில கொள்ளையர்களைப் போலீஸார் மடக்கி பிடித்தனர். அதேபோல் ரயில் மூலமாக தப்பிக்க முயன்ற நபரையும் போலீஸார் பிடித்தனர். இதில் இன்று காலை ஜாபர் என்ற கொள்ளையன், என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் செயின் பறிப்பு சம்பவம் குறித்தும், குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யபட்டது ஏன்? என்பது குறித்தும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள். கொள்ளையடிக்கப்பட்ட 26 சவரன் கொண்ட 6 செயின்கள் மீட்கப்பட்டுள்ளன.
இரானி கொள்ளையர்கள்
பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களின் கவனத்தைத் திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவதே இரானி கொள்ளையர்களின் ஸ்டையில்.
இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்தே குற்றவாளிகளைப் பிடித்தோம். விமானத்தை நிறுத்தி வைத்து, அதிலிருந்து குற்றவாளிகளைக் கைது செய்தோம்.

பறித்த நகைகளை 3 கொள்ளையர்கள் தனித்தனியாக எடுத்துச் சென்றுள்ளனர். குற்றவாளிகள் பயன்படுத்திய பைக், கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பைக்கை எடுப்பதற்காக போலீஸார் அவரை அழைத்துச் சென்ற போது, போலீஸை தாக்கி தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அதனால், தற்காப்புக்காக போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்.
சென்னையில் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.