செய்திகள் :

தென் கொரியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 27,000 பேர் வெளியேற்றம்!

post image

தென் கொரியா நாட்டில் பரவிய காட்டுத் தீயினால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

தென் கொரியா நாட்டின் தெற்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலையாலும் மற்றும் வீசும் பலத்த காற்றினாலும் தொடர்ந்து பரவும் காட்டுத் தீயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் அன்டோங் நகரம் மற்றும் பிற தென்கிழக்கு நகரங்களில் உள்ள சுமார் 27,000 பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 9,000 தீயணைப்பு வீரர்கள், 130-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு தொடர்ந்து பரவும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 26 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய தீயணைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தென் கொரியாவின் உய்சோங் நகரத்த்தின் சியோங்சாங் கவுன்டியிலுள்ள ஒரு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 2,600 கைதிகளை இடமாற்றும் பணியை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டிருந்தனர்.

மேலும், உய்சோங் மலைப்பகுதியில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி அதன் விமானி பலியானதாக தீயணைப்பு அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஹைதி: கும்பல் தாக்குதலில் கென்யா அதிகாரி மாயம்!

அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!

யேமன் நாட்டின் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.யேமனின் வடக்கு சனா மற்றும் சதா மாகாணங்களின் மீது அமெரிக்க கடந்த சில மணி நேரங்களில் மட்டும... மேலும் பார்க்க

தாயகம் திரும்பிய 8.79 லட்சம் ஆப்கன் மக்கள்! எஞ்சியவர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானிலிருந்து அப்கான் அகதிகளை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி துவங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் ஆப்கன் குடியுரிமை அட்டை... மேலும் பார்க்க

மலேசியா எரிவாயு குழாய் வெடி விபத்து: 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மலேசியா நாட்டில் எரிவாயு குழாய் வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மிகப் பெரிய நகரமான கோலாலம்பூரின் புத்ரா பகுதியில் இன்று (ஏப் 1) காலை 8.10... மேலும் பார்க்க

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி?

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி? என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.இணைதளவுலகில் எங்கும் ‘ஜிப்லி’மயமாக அலைவீசிக் கொண்டிருக்கிறது. சின்னச்சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும... மேலும் பார்க்க

ஹைதி: முக்கிய நகரத்தைத் தாக்கி 500 சிறைக் கைதிகளை விடுவித்த குழுக்கள்!

ஹைதி நாட்டின் முக்கிய நகரத்தில் தாக்குதல் நடத்திய குற்றவாளி குழுக்கள் அங்குள்ள சிறையிலிருந்து சுமார் 500 சிறைக் கைதிகளை விடுவித்துள்ளனர். மத்திய ஹைதியின் மிரேபலாசிஸ் நகரத்தில் இரண்டு வெவ்வேறு குற்றவாள... மேலும் பார்க்க

போட்டியின் நடுவே மயங்கிய முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மரணம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் போட்டியின் நடுவே மயங்கி விழுந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குத்துச்சண்டை ச... மேலும் பார்க்க