'பட்டிமன்றம் பேசுறதுக்கான தகுதி எனக்கு இல்லேன்னு நம்பினேன்' - பட்டிமன்றம் ராஜா |...
ஹைதி: முக்கிய நகரத்தைத் தாக்கி 500 சிறைக் கைதிகளை விடுவித்த குழுக்கள்!
ஹைதி நாட்டின் முக்கிய நகரத்தில் தாக்குதல் நடத்திய குற்றவாளி குழுக்கள் அங்குள்ள சிறையிலிருந்து சுமார் 500 சிறைக் கைதிகளை விடுவித்துள்ளனர்.
மத்திய ஹைதியின் மிரேபலாசிஸ் நகரத்தில் இரண்டு வெவ்வேறு குற்றவாளி குழுக்களைச் சேர்ந்த நபர்கள் அங்குள்ள சாலைகளில் சென்றவர்கள் மற்றும் கட்டடங்கள் மீதும் நேற்று (மார்ச் 31) துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அங்குள்ள மக்கள் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியதில் அந்நகரமே பரபரப்பாக காட்சியளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ள காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்தக் குழுக்கள் அப்பகுதியின் சிறைச்சாலையைத் தகர்த்து அதில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 500 சிறைக் கைதிகளை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது அந்த குழுக்களிடம் இருந்து மிரேபலாசிஸ் நகரத்தை மீட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறை கூறியுள்ளது. இருப்பினும், சிறையிலிருந்து தப்பித்த சுமார் 500 கைதிகள் அந்நகரத்தின் தெருக்களில் சுற்றித் திரியலாம் எனவே மக்கள் பாதுகாப்போடு இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, ஹைதியின் தலைநகர் முழுவதும் குற்றவாளி குழுக்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் தற்போது நடைபெற்ற தாக்குதலின் மூலம் அவர்கள் புறநகர் பகுதிகளையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மேலும், இந்தத் தாக்குதல் நடைபெற்ற மிரேபலாசிஸ் நகரமானது ஹைதியின் 2 முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. அதில், ஒரு சாலை தலைநகர் போர்ட்-ஒ-பிரின்ஸிலிருந்து கடல் எல்லை வரை வடக்கிலிருந்து தெற்கிலும் மற்றொன்று மேற்கிலிருந்து கிழக்கேவுள்ள டோமினிகேன் குடியரசு நாடு வரையிலும் நீண்டுள்ளது.
இத்துடன், ஆள்களைக் கடத்தி பணம் பறிக்கும் 400 மவோஸோ என்ற குழுவும் மற்றும் கனான் நகரைக் கட்டுப்படுத்தும் தலிபான் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் மற்றொரு குழுவும் இணைந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:போட்டியின் நடுவே மயங்கிய முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மரணம்!