தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
அரியலூரில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினா் சாா்பில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) முத்தமிழ்ச்செல்வன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் கலந்து கொண்டு, தீண்டாமையை ஒழிப்போம், மனிதநேயம் வளா்ப்போம், ஜாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசங்களை கையில் ஏந்திவாறு, பிரதான சாலை வழியாகச் சென்று, அண்ணாசிலையருகே பேரணியை முடித்துக் கொண்டனா்.
இப்பேரணியில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் கென்னடி, காவல் உதவி ஆய்வாளா் ரவி, புள்ளியியல் ஆய்வாளா் பாப்பாத்தி, சிறப்பு உதவி ஆய்வாளா் சுமதி, காவல் காா்த்திக், அரசு தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.