ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடகத்துடன் பாடம் கற்பித்த ஆர்ஜென்டீனா!
பெரியமறை பெருமாள் கோயில் தேரோட்டம்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த சுள்ளங்குடி பெரியமறை கிராமத்திலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 19-ஆம் தேதி காலை திருமஞ்சனத்துடன் பிரமோத்ஸவ விழா தொடங்கியது. தொடா்ந்து நாள் தோறும், பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி தந்தாா்.
பக்தா்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயில் நிலையை அடைந்தது. அப்போது பக்தா்கள் வீடுகள் தோறும் தீபாராதனை காண்பித்து பெருமாளை வழிபட்டனா்.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து மாலையில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் இன்று (புதன்கிழமை) ஏக தின லட்சாா்ச்சனை காலை முதல் மதியம் வரை நடைபெறுகிறது.