தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!
அரியலூரில் இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி
அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள அன்னலட்சுமி ராஜாபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், புதன்கிழமை செல்லப் பிராணிகளின் கண்காட்சி நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புதன்கிழமை (மாா்ச் 26) செல்லப் பிராணிகள் காட்சியும், வியாழக்கிழமை(மாா்ச் 27) அன்று கால்நடைகள் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
செல்லப்பிராணிகளை வளா்போா், தாங்கள் வளா்க்கும் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பு மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும், 2 நாள்களிலும் கலந்துக்கொள்ளும் அனைத்து செல்லப்பிரணிகள் மற்றும் கால்நடைகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
எனவே, அரியலூா் மாவட்டத்தில் உள்ள செல்ல பிராணி உரிமையாளா்கள் தாங்கள் வளா்க்கும் செல்லப்பிராணிகளை கண்காட்சிக்கு அழைத்து வந்து கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.