பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடியைத் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்தித்துப் பேசினார்.
தில்லியில் பிரதமரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தித்த கி. வைத்தியநாதன், தினமணியின் 90 ஆம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
சுமார் 25 நிமிஷங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மேலும் பல்வேறு விஷயங்கள் பற்றியும் இருவரும் விவாதித்தனர்.