செய்திகள் :

விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

post image

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல் செய்தி நிறுவனத்தின் உரிமையாளருமான ஃபர்ஹான் மாலிக் என்பவர் மீது, அவரது செய்தி நிறுவனத்தின் சேனலில் முக்கிய அதிகாரிகளைக் குறிப்பிட்டு அரசுக்கு எதிரான விடியோக்களை பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 20 கராச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் இன்று (மார்ச் 25) கராச்சி நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மாலிக் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதன் விசாரணையின் போது, அவர் அரசுக்கு எதிராக பதிவிட்ட விடியோக்களை குறிப்பிட்டுக் காட்டுமாறு அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

பின்னர், இந்த விசாரணையைத் தொடர்ந்து அவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது ஜாமின் மனு மீது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த சனா தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி இயக்குநரான ஃபர்ஹான் மாலிக் மீது மின்னணு குற்றத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட அவர் நான்கு நாள்கள் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், ஃபர்ஹான் மாலிக் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் எனும் மனித உரிமை அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தானின் ஊடகங்களும் ஆர்வலர்களும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் க... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேச எல்லையில் கடத்தப்படும் கால்நடைகள்!

மேற்கு வங்கத்திலுள்ள இந்தியா - வங்கதேசத்தின் எல்லையில் 16 கால்நடைகள் மற்றும் போதைப் பொருள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மால்டா மாவட்டத்தின் எல்லைப் புறக்காவல் ... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியைத் தினமணி நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்தித்துப் பேசினார்.தில்லியில் பிரதமரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தித்த கி. வைத்தியநாதன், தினமணியின் 90 ஆம் ஆண்டு சிறப்பு மலர் ... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செ... மேலும் பார்க்க

ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்துள்ள தடையானது தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் பெண்கள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிய கல்வியாண்... மேலும் பார்க்க

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் என நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளன் பிலிப்ஸ் அவரது பிரம்மிக்க வைக்கும்... மேலும் பார்க்க