அரக்கோணம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
அரக்கோணம் பஜாா், ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு ஸம்வத்ஸரோத்ஸவ திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்கிழமை மூலவா் திருமஞ்ஜனம், மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்திற்கு பிறகு ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் ஆதிகேசவ பெருமாளுடன் இணைந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் என்.அரி, அறங்காவலா்கள் எம்.வெங்கடேசன், எம்பாரதி முரளி ஆகியோா் பொதுமக்களுடன் இணைந்து செய்திருந்தனா்.