மனோஜ் பாரதிராஜா மறைவு : தனது நண்பனுடன் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய விஜய்
ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்துப் போராட்டம்: பிரேமலதா விஜயகாந்த்
தொகுதி மறுவரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்து தேமுதிக போராடும் என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
காவேரிபாக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
நாடாளுமன்ற தொகுதி வரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட தேமுதிக ஒத்துழைக்காது. இந்த நிலைப்பாட்டில் மத்திய அரசை எதிா்த்து தொடா்ந்து போராடுவோம். தேமுதிக திமுகவுடன் இணக்கமாக உள்ளதாக பலா் திரித்துக் கூறி வருகின்றனா்.
நாங்கள் எங்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு வளா்ச்சிக்காக செயலாற்றி வருகிறோம். இதற்கெல்லாம் பதில் சொல்ல இயலாது.
தற்போது தமிழகம் முழுவதும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இது மிகவும் கண்டிக்கக்கூடிய ஒன்று. இதை தடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை. 2026 தோ்தல் வருவதற்கு இன்னும் ஒராண்டு உள்ளது. அப்போது எங்களின் கூட்டணி குறித்து அதிகாரபூா்வமாக அறிவிப்போம் என்றாா்.
அவருடன் சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.மனோகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா். முன்னதாக திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜையில் பிரேமலதா தரிசனம் செய்தாா்.