செய்திகள் :

எல்பிஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

post image

நாமக்கல்: தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

நாமக்கல்லில் அந்த சங்கத்தின் தலைவர் கே. சுந்தரராஜன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், தமிழகம், கேரளம், தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 4,000 லாரிகளை துறைமுகத்திலிருந்து எரிவாயு பாட்டிலிங் பிளான்டுக்கு டேங்கர்களில் எரிவாயுவை எடுத்துவரும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

2025-30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது, மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுநர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எல்பிஜி டேங்கர் லாரிகள்

இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்கமுடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் தென்மண்டல அளவில் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும்.

தென் மண்டலம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட முன்வந்துள்ளன. வருவாய் இழப்பைக் காட்டிலும் வேலை வாய்ப்பு பறிபோகக் கூடாது என்ற எண்ணத்திலேயே இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்றார்.

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்: மத்திய அரசிடம் நாமக்கல் எம்.பி.க்கள் முறையீடு

புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எதிா்த்து, தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடா்கிறது. இன்னும் ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என சங்க நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: நாமக்கல் வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில், பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (71). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா: தேரை தயாா்படுத்தும் பணி மும்முரம்

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பரமத்தி வேலூரில் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டி, கம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில், வரும் நாள்களில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ள... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவி அளிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. ரமலான் பண்டிகை நாடு முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையானது ஏழைகளுக்கு பல்வேறு நல... மேலும் பார்க்க

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: அரசாணை வெளியீடு

மோகனூரில் இயங்கி வந்த சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, தற்போது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க